
கொவிட் -19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பைசர்- பயோன்டெக்’ தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் இலவசமாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவத்துள்ளார்.
அவசர நிலைமைககளில் கையாளும் இந்தத் தடுப்பூசியை இந்த ஆண்டு முதற்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகில் 180 நாடுகள் இணைந்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்றுநோய் தடுப்பு சமவாயத்தில் கைச்சாத்திட்டு கொரோனா சவால்களை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்பட்டுவருகின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையில் 20 வீதமான மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக பெற்றுக்கொடுக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும், இதன்படி நிச்சயமாக எமக்கு தடுப்பூசி கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகள் வெவ்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவற்றில் ‘பைசர் – பயோன்டெக்’ தடுப்பூசி அவசரநிலைமைகளில் கையாள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.