January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு நாள் அனுஷ்டிப்பு

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரான தியாகராஜா மகேஸ்வரனின் 13 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை  தொகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

முன்னாள் அமைச்சர்  மகேஸ்வரனும் அவரது பாதுகாவலரும், 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு  ஶ்ரீ ​பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.