
இலங்கைகயின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்டப்பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வசிக்கும் குரங்குகள் குடியிருப்புகளையும், வர்த்தக நிலையங்களையும் நோக்கி படையெடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தகுரங்குகள் தேயிலை மலைகளில் தொழில் புரியும் கிராமிய மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாகவும் இதனால் தமது பிள்ளைகள் பட்டினியுடன் தாம் வரும் வரை காத்திருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குரங்குகள் நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் உணவு வகைகளை எடுத்து செல்வதாகவும், உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டப்போதும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை என அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.