
வடக்கு மாகாணத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த மாகாணத்தின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கிளிநொச்சி பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.