தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்கள், மற்றும் முதலாளிமார் சம்மேளனம் முட்டுக்கட்டையாக உள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி மாதம் இறுதிக்குள் இதற்கான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இருந்தே பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் ஆகியவற்றுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது.
எனினும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் கம்பனிகள் ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு விடயத்தில் தயக்கம் காட்டி வருகின்றன என அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனவரி மாதம் இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவுகள் வழங்குவது குறித்து ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.