
சபரகமுவ , மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் அதிக மழையுடனான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென அறிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய மாவட்டங்களிலும் இடைக்கிடையே ஓரளவுக்கு மழை பெய்யுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இந்த காலப்பகுதியில் நாட்டை சூழவுள்ள கடல் பிரதேசங்களில் கடும் காற்று வீசுமெனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.