இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானியான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை 1, 1சி, 1ஈ, 2, 2 ஏ, 2பி, 3 மற்றும் 3 ஏ ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் மீள அறிவிக்கும் வரை தனிமைப்படத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.