November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்ற புத்தாண்டு ஆராதனைகள்

இலங்கையில் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னைய வருடங்களில் தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் நடத்தப்பட்ட போதும், தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் இந்த வருடம் நள்ளிரவு ஆராதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் இன்று காலை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரை கொண்டு தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் அந்த ஆராதனைகளில் கலந்துகொண்டனர்.

ஆராதனை நிகழ்வுகளின் போது, பொலிஸாரும் மற்றும் இராணுவத்தினரும் தேவாலய பகுதிகளில் விசேட பாதுப்பை வழங்கியிருந்தன.

வவுனியா புனித அன்னாள் தேவாலயம்

வவுனியாவில் புதுவருட விசேட ஆராதனைகள் இன்று காலை 6.30 மணிக்கு பூவரசன்குளம் புனித அன்னாள் தேவாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது அருட்தந்தை ரெஜினோல்டினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயம்

மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் புத்தாண்டு  திருப்பலி பூசை, மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்  இன்று காலை 6 மணியளவில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.