
(கோப்புப் படம்- மட்டக்களப்பு)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்துவந்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 11 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதற்கட்டமாக சுமார் 14500 பேருக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நிவாரணப் பணிகளுக்காக அரசு சுமார் 66 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் விபரம்:
காத்தான்குடி – 1,630 குடும்பங்கள்; 5868 பேர்
வாகரை – 654 குடும்பங்கள்; 1,930 பேர்
மண்முனை வடக்கு – 5,263 குடும்பங்கள்; 16,172 பேர்
வாழைச்சேனை – 367 குடும்பங்கள்; 1,157 பேர்
கோரளைப்பற்று மத்தி – 140 குடும்பங்கள்; 470 பேர்
மண்முனைப்பற்று ஆரையம்பதி – 29 குடும்பங்கள்; 87 பேர்
கோறளைப்பற்று மேற்கு – 137 குடும்பங்கள்; 480 பேர்
பட்டிப்பளை – 43 குடும்பங்கள்; 152 பேர்
ஏறாவூர் பற்று செங்கலடி- 1,726 குடும்பங்கள்; 5,538 பேர்
ஏறாவூர் நகர் – 34 குடும்பங்கள்; 120 பேர்
மண்முனை மேற்கு – வவுணதீவு – 25 குடும்பங்கள்; 85 பேர்
போரதீவுப்பற்று – வெல்லாவெளி – 8 குடும்பங்கள்; 21 பேர்
களுவாஞ்சிக்குடி – 2 குடும்பங்கள்; 11 பேர்
கிரான் – 1,080 குடும்பங்கள்; 3,230 பேர்