July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாகாண சபைகளை இரத்துச் செய்வது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது’

மாகாண சபைகளை இரத்து செய்வதென்பது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வது இலகுவான விடயமல்ல என்றும் அது இரத்துச் செய்யப்பட்டால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்தில் இலங்கை- இந்திய உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமக்கு போதியளவு வேட்பாளர்களை ஒதுக்குவதற்கு ஆளும் கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

2020 பொதுத் தேர்தலின் போதும் வேட்பாளர்களை ஒதுக்கும் விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.