April 29, 2025 1:28:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தொடர்பாக கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் கலந்து கொண்டிருந்தர்.

இதன்போது யாழ். மாநகர சபையின் புதிய மேயராக தெரிவாகியுள்ள தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுடன் எவ்வாறாக செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.