
மா அரைக்கும் இயந்திரத்தில் கூந்தல் சிக்கியதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையின் பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 39 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுயதொழில் செய்துவரும் குறித்த பெண் நேற்று மாலை வழமைபோல் மா அரைக்கும் இயந்திரத்தில் மா அரைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக அவரது கூந்தல் மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளதாகவும்,
இதனையடுத்து அவர் இயந்திரத்துடன் பலமாக சுற்றப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.