May 4, 2025 4:44:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் கொரோனா- 149 பேருக்கு தொற்று உறுதி: 5,731 பேர் தனிமைப்படுத்தலில்

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 5731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 26 பேர் பூரணமாகக் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய சுமார் 2,035 குடும்பங்களைச் சேர்ந்த 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் இரண்டு தடவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு மக்களின் அவதானமும் ஒத்துழைப்பும் அவசியம் என்று அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் அநாவசியமான பயணங்களை தவிர்த்து, தேவையான விடயங்களுக்கு மாத்திம் பயணங்களை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.