
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இன்று பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சபாநாயகரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பொலிஸ் சாரதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் சபாநாயகரின் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றுக்குச் சென்றுள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபட்ட 25 க்கு மேற்பட்ட பாராளுமன்ற ஊழியர்களுக்கு இன்று பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.