
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட வசந்தபுரம்- பொம்மை வெளி பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டுத் திட்டம், மலசலகூடம், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசை வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். “எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாகக் கூறிப் பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்துக்குத் தயாராகுமாறு கூறிய அரச அதிகாரிகளால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், இதுவரை வீட்டுத் திட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. மிகவும் தாழ்நிலப் பிரதேசத்தில் வசிக்கும் நாம் மழைக் காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றோம். எமது இந்த அவல நிலையை அரச அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்கின்றார்கள்” -என்றனர் போராட்டக்காரர்கள்.இந்தப் பிரதேசத்தில் 92 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.