February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு எதிராக மன்னாரில் பேரணி

கொரோனாவால் உயிரிழப்போரின்  உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் இன்று கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

மன்னார் நகரில் இருந்து மாவட்ட செயலகம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் உள்ளிட்ட மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் வகையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேலிடம் மகஜரொன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் கையளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.