January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்த யுக்ரைன் சுற்றுலாப் பயணிகள் குழுவில் மேலும் 3 பேருக்கு கொரோனா

File Photo

யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, யுக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகளில் 6 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி 185 பேரை உள்ளடக்கிய குழுவொன்றும், 29 ஆம் திகதி 204 பேரை உள்ளடக்கிய  குழுவொன்றும் யுக்ரைனிலிருந்து இலங்கை வந்தது.

அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே அந்தக் குழுவினரிடையே இருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய காலை 3 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இரவு மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.