July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 59,377 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

File photo

கொரோனா தொற்று நிலைமையால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 59,377 இலங்கையர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 137 நாடுகளிலில் இருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இவர்களில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 26,812 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 5,484 பேரும், ஆபிரிக்க வலய நாடுகளிலிருந்து 2,026 பேரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 11,323 பேர் டிசம்பர் மாதத்தில் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகச் சிக்கியுள்ள அல்லது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமையவே, வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயன்முறை தொடர்கின்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.