கொழும்பு நகரில் வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை (14) முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
காலி வீதி , ஹைலெவல் வீதி , பேஸ்லைன் வீதி உள்ளிட்ட வாகன நெரிசல்கள் அதிகமாக நிலவும் பிரதான வீதிகளில் இவ்வாறாக வீதி ஒழுங்கைச் சட்டம் அமுலாகவுள்ளன. இவ்வாறாக ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்காத வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளன. இதன்படி வாகனங்கள் அந்தந்த ஒழுங்கைகளிலேயே பயணிக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்ட போதும் கொரோனா தொற்று நிலைமையின் பின்னர் அதில் தளர்வுகள் காணப்பட்டது. எவ்வாறாயினும் மீண்டும் நாளை முதல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.