May 1, 2025 7:19:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கைக்கு எதிராக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் சட்ட நடவடிக்கை

இலங்கை அரசாங்கத்தின் கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கைக்கு எதிராக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

500 க்கு மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் கூட்டணியான பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டால் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கொள்கையை மாற்றியமைக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மனிதனின் அடிப்படை உரிமையை மீறும் இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடு சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அதற்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.