January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.

அலரி மாளிகையில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் இதன்போது பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்து கொண்டார்