October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய வகை கொரோனா இலங்கைக்குள் உள்ளதா என கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பம்

File photo

பல நாடுகளில் பதிவாகிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மேற்கொள்ளும் பீசீஆர் பரிசோதனைகளில் கொரோனாவின் புதிய உருமாற்றம் அடையாளம் காண முடியாதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, செல் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா, தெரிவித்துள்ளார்.

வானொலியொன்றுக்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவின் புதிய உருமாற்ற மரபணு வரிசையை முறையை முழுமையாக ஆய்வு செய்வது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கனடா, ஜப்பான், லெபனான், டென்மார்க், ஸ்வீடன், நைஜீரியா, சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த புதிய திரிபு வேகமாக பரவி வருவதால், பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. பிரிட்டனிலிருந்து உலகின் மற்ற நாடுகளுக்கு வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய திரிபு தொற்றுக்குள்ளாகாது பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.