2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்த பிள்ளையான், இன்று முற்பகல் 9.30 மணியளவில் விசாரணை குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் இன்று அந்த பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.