திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 18 ஆம் திகதிக்கு பின்னர் 108 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது குறித்த பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்தும் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், சுகாதார ஆலோசனைகளையும் முறையாக கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேங்களில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு அத்தியவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மூலம் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.