February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் திருவெண்பா ஓதுதல் இறுதி நாள் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன், பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட கலைப்பீட 40 அணி மாணவர்களின் திருவெண்பா ஒதுதல் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

திருவெண்பா ஓதுதல் நிகழ்வு கடந்த ஒன்பது தினங்களாக நடைபெற்றதுடன், அதன் இறுதி நாளான இன்று மாணிக்கவாசகரின் திருவுருவப்படத்துடன் ஊர்வலம் வந்தனர்.

தற்போதைய கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கு ஏற்பாட்டுக்குழுவினர் தமது நன்றியை கூறிக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.