January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் தென் ஆபிரிக்காவுக்கு இலகு வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தென் ஆபிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலாவது துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 396 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென் ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 621 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா, இலங்கையைவிட 225 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்றிருந்தது.

போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து, 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

போட்டியின் நான்காவது நாளில் 180 ஓட்டங்களுக்கு இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்தி, தென் ஆபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 64 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தனஞ்ஜய டி சில்வா, சுரங்க லக்மால் மற்றும் எஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் காயங்களால் போட்டியில் இருந்து வெளியேறியதாகவும், மேலும் சில வீரர்கள் சிறிய காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.