February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 600 க்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று

இலங்கையில் 600 க்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையில் 600 க்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா  ஏற்பட்டுள்ளதாகவும் கர்ப்பிணித் தாய்மார் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக அரச மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனைக் கூட்டங்களுக்குச் (கிளினிக்) செல்ல சில தாய்மார் பயப்படுவதாகவும், குழந்தையின் நலன் கருதி சிகிச்சைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட்- 19 தொற்றுக்குள்ளான தாய்மார் மற்றும் கொவிட் தொற்றாத தாய்மாரை வெவ்வேறாக கவனிப்பதற்கு அரச மருத்துவமனைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.