May 25, 2025 4:43:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொம்பே பிரதேச சபையின் புதிய தவிசாளராக காரியப்பெரும பியசேன பதவியேற்பு

தொம்பே பிரதேச சபையின் புதிய தவிசாளராக காரியப்பெரும பியசேன இன்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மிலான் ஜயதிலக பொதுத் தேர்தலில் பாராளுமன்றம் தெரிவானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே, காரியப்பெரும பியசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.