
இலங்கையின் கேகாலை பிரதேசத்தில் தம்மிக்க பண்டார என்பவரால் ‘கொரொனா தடுப்புப் பாணி’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட பாணியை அருந்திய ஐவருக்கும் கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வரக்காபொல மற்றும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அவருடைய தாய் உட்பட ஐவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தாம் தம்மிக்க பண்டார கொரோனா தடுப்புப் பாணியைப் பருகியதாகவும், பாணி பயனளிக்கவில்லை என்றும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சகாதார அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஐவரையும் கொரோனா சிகிச்சை நிலைங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொரோனா தடுப்புப் பாணியைப் பெற்றுக்கொள்ளச் சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை மீறி, போலியான தகவல்களுக்குப் பின்னால் சென்று உயிராபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.