November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இராணுவத் தளபதிக்கு இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி ஷவேந்திர சில்வா பதவியேற்றதுடன், அதன்பின்னர் சிறப்புப் படையணி மற்றும் பாதுகாப்பு பிரதானி செயல் தளபதியாகவும் 2020 ஜனவரி 2 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இதேவேளை இலங்கையின் கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானியாகவும் ஷவேந்திர சில்வா பதவி வகிக்கின்றார்.

அத்துடன் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ணவுக்கும் ஜனாதிபியினால் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மேஜர் ஜெனரல் தரத்தில் இருந்து ஜெனரலாக கமல் குணரட்ண தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.