January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மஞ்சள் கட்டிகள் மன்னாரில் தீயிட்டு அழிப்பு!

இந்தியாவில் இருந்து இலங்கையின் மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்டு, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 532 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் இன்று தீயிட்டு, அழிக்கப்பட்டுள்ளன.

மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி முன்னிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக உட்பட தடயவியல் நிபுணத்துவ பொலிஸ் குழுவினர் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றல் நிலையத்தில் இவ்வாறு தீயிட்டு, அழித்துள்ளனர்.

 

கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்கள் உடனடியாக தீக்கிரையாக்கப்பட வேண்டும் என்ற சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் அனுப்பிவைத்த சுற்றறிக்கைக்கு ஏற்பவே, மேற்படி மஞ்சள் கட்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

சுமார் 532 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் மன்னார், பேசாலை, தாழ்வுபாடு, தலைமன்னார் கடல் பகுதிகள் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் இவற்றைக் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.