January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா நாஸ்வில் குண்டுவெடிப்பை மேற்கொண்டவரின் தகவல்கள் வெளியானது

அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கார் குண்டுவெடிப்பினை மேற்கொண்டவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் 63 வயதுடைய அன்டனி குயின் வோர்னர் எனவும், அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இலத்திரனியல் பொருட்களை வைத்தே குண்டுவெடிப்பை மேற்கொண்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே வோர்னர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரில் வெடித்துச்சிதறிய பகுதியில் மனித எச்சங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அன்டனி குயின் வோர்னரின் மரபணுக்களுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எச்சங்கள் பொருந்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ‘குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவரவில்லை’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.