May 24, 2025 22:41:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா மரணங்கள் குறித்த நிபுணர் குழுவின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான நிபுணர் குழுவின் இறுதித் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா என்பது குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக செயற்படுவது நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், இலங்கையில் இதுவரையில் 41,054 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 32,701 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 191 மரணங்கள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.