யாழ் மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் செனரத் பண்டார நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினார். இவ்வேளையில், வடக்கில் இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டிய குரு முதல்வர் அதற்கு இந்த அரசாங்கத்தின் மூலம் தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்று, யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் கட்டளைத் தளபதி நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இவ்வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், இராணுவமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அத்தோடு இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களைளும் முன்னெடுக்கும்.
இங்கே இரண்டு நாடுகளும் இல்லை , இரண்டு நிர்வாகமும் இல்லை , இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை.நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்கு இடமில்லை என்று தெரிவித்தார்