October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிட் மரணங்கள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்’: சுகாதார அமைச்சு வேண்டுகோள்

கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல்களை தகனம் செய்வது குறித்து தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் முறை குறித்து சில அரசியல்வாதிகளால் இணையத்தளங்கள் மூலமாக தவறான தகவல்கள் பரபப்பப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்கள் சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளின் பிரகாரமே தகனம் செய்யப்படுகின்றது எனவும் சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.