November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்த வரைபை மீளாய்வு செய்ய யோசனை!

அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிகால் ஜயமான்ன தலைமையில் 14 பேரை கொண்டதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பாக அரசாங்க தரப்புக்குள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வரைபில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கமைய ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் கருத்துக்களை பெற்று அது பற்றி ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை 20 ஆவது திருத்தம் தொடர்பான வரைபில் கட்டயாம் திருத்தம் செய்யப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.