May 14, 2025 16:32:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அந்த மாவட்டத்தின் எஹலியாகொட பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மின்னான, விலேகொட, யகுதாகொட, அஸ்ககுல வடக்கு, போபத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொடகாவெல பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு மற்றும் தெற்கு, மஸ்இம்புல, கொட்டல ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று காலை கொழும்பு, தெமட்டகொடவில் வேலுவன வீதிப் பிரதேசம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.