உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு, தெமட்டகொடவில் வேலுவன வீதிப் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக இன்றைய தினத்தில் கொவிட் தடுப்பு செயலணி விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.
அது தொடர்பான தீர்மானம் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.