”மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணிக்கு எம்.பியாக பதவியேற்க அரசியலமைப்புக்கமைய இடமளிக்கப்படவில்லை, ஆனால் அதேபோன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு எம்.பியாக பதவியேற்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“1982 ஆம் ஆண்டில் ‘டெலோ’ அமைப்பின் தலைவரான குட்டிமணி என்ற செல்வராஜா யோகசந்திரனை பாராளுமன்ற உறுப்பினராக குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அப்போதைய சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசியலமைப்பின் 89 மற்றும் 91ஆம் உறுப்புரைகளை காட்டி அவரின் எம்.பி பதவி நிராகரிக்கப்பட்டது.
அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே அவரின் பதவி நிராகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பிரேமலால் ஜயசேகர எம்.பியாகியுள்ளார்.
அப்படியாயின் தற்போதைய சபாநாயகர் அரசியலமைப்பை மீறி நடந்துகொண்டுள்ளார்” என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.