
யாழ். செம்மணியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மயானத்தில் பாரிய கிடங்கு ஒன்றை வெட்டி, அதனுள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு அதன் மேல் உக்கக்கூடிய கழிவுகளை கொட்டி கிடங்கு மூடப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட்ட பிரதேச சபை தவிசாளர் , உப தவிசாளர் , உறுப்பினர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் ஏ-9 வீதியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எந்தவித அனுமதிகளும் பெறப்படாது சட்டவிரோதமான முறையில் சமூகப்பொறுப்பற்ற வகையில் இவ்வாறாக கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.