May 22, 2025 22:51:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும்  செயற்பாடுகளுக்காக  ‘மெக்’ எனப்படும் கண்ணிவெடிகள் அகற்றல் ஆலோசனைக் குழுவிற்கு ஜப்பான் அரசாங்கத்தால் 115 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் கண்ணிவெடிகள் அகற்றல் ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் எமிலி எம்பே ஆகியோருக்கிடையில் இதற்கான ஒப்பந்தம் கடந்த 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் காணிகளின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்தல், இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ள சுமார் 8000 இற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல் போன்ற இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு இது பயணளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கண்ணிவெடிகள் அகற்றல் ஆலோசனைக் குழுவானது  2002 ஆம் ஆண்டிலிருந்து கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இதுவரை சுமார் 92 சதுர கிலோ மீற்றர் பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.