January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை’

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள் மூலம் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அவதானம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவற்றில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் பின்பற்றப்படுவதை அவதானிக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென அனைத்து இனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.