January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா மரணங்களுக்கு வீதி ஆர்ப்பாட்டங்கள் மூலம் தீர்வைக் கோருவது பொருத்தமற்றது’

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு வீதி ஆர்ப்பாட்டங்கள் மூலம் தீர்வைக் கோருவது பொருத்தமற்றது என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களை அடக்கம் செய்வது குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்- 19 தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை எந்தவொரு மதத்துடனும் தொடர்புபட்ட விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பான இறுதி முடிவு அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேநேரம், கொரோனா மரணங்களுடன் தொடர்புபட்ட விடயங்களை மதத் தலைவர்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ அல்லது தொழிற்சங்க பிரதிநிதிகளிடமோ கேட்டுப் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.