இலங்கையில் மேல் மாகாணத்திலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்வோரிடையே நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நத்தார் மற்றும் புத்தாண்டையொட்டி மேல் மாகாணத்தில் இருந்து பெருமளவானோர் வெளி மாகாணங்களுக்கு செல்லும் நிலையில், அவர்களால் மேல் மாகாணத்திற்கு வெளியிலும் கொரோனா பரவலாம் என்பதால் அவர்களை என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
அந்த வகையில் மேல் மாகாணத்திலிருந்து வாகனங்கள் வெளியேறக் கூடிய எல்லைப் பகுதிகளில் 11 இடங்களில் இவ்வாறாக என்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகின்றது.
இதன்படி கடந்த 18ஆம் திகதி முதல் இதுவரையில் நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனைகள் ஊடாக மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.