April 30, 2025 8:50:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் போலி ஆவணங்களைக் கொண்டு பதிவுசெய்யப்பட்ட 700 வாகனங்கள் தொடர்பில் விசாரணை

இலங்கையில் போலி ஆவணங்களைக் கொண்டு பதிவுசெய்யப்பட்ட 700 க்கு மேற்பட்ட வாகனங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குத்துறை மற்றும் பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொறுப்பான அதிகாரிகளின் உதவியுடன் தனிநபர்கள் வாகனப் பதிவு முறைமையை அணுகி, போலியான தகவல்களை உட்சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் முறைமையில் தகவல்களை மாற்றுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலி ஆவணங்களைக் கொண்டு பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் பொது மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.