May 4, 2025 13:58:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோசப் பரராஜசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.