January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம்  அனுஷ்டிப்பு

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் சகோதரரான அக்கரைப் பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த கணபதிப்பிள்ளை பாக்கியராசா, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் வரிசையில் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் பெயர் இடம்பெறவில்லை.

மாறாக இலங்கையில் முதன்முதலில் படுகொலை செய்யப்பட்டவர்தான் எனது சகோதரர் கணபதிப்பிள்ளை தேவராசா என குறிப்பிட்டார்.

மேலும் 1685 டிசம்பர் 25 ஆம்  திகதி பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசா பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இதன்படி இலங்கையில் படுகொலை செய்ய்பட்ட முதலாவது ஊடகவியலாளர்களில் கணபதிப்பிள்ளை தேவராசாவும் பதிவு செய்யப்படல் வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1981 ஆம் ஆண்டு தொடக்கம் 1985 ஆம் ஆண்டுவரை ஊடகத்துறையில் மிகவும் சிறப்புறச் செயற்பட்டவர். பல கட்டுரைகளை வெளிக்கொணர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.