இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும், ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் வரவிருந்த விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் முதன்மை விமான நிறுவனமான ‘ஏரோப்லோட்’ இலங்கைக்கு அறிவித்துள்ளது.
26 ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள திறக்கப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி அதிகாலை 300 பேர் கொண்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று முதலாவதாக இலங்கை வருவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் உக்ரைன் மற்றும் கஜகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் விமானங்கள் திட்டமிட்டபடி இலங்கைக்கு வருமென இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரயாச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலைமை எதிர்கொண்டு நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முதற் கட்டமாக இதனை செயல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.