February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, யோனக்கபுர கிழக்கு – மேற்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்  தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே நாட்டில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.