பிரிட்டன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வரி கொள்கை மறுசீரமைப்புக்கு அமைவாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கான கட்டணம் மறுசீரமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக இலங்கை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்னவினால் விசேட ஊடக அறிக்கையொன்று வெளியிட்டப்பட்டுள்ளது.
2021 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பிரிட்டனுக்கு அனுப்பப்படும் அனைத்து தபால் பொதிகளுக்காக அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் வரியானது வரி மறுசீரமைப்பு கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும் என்று அந்நாட்டு தபால் நிர்வாக பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையிலிருந்து அங்கு அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கான வரியும் மறுசீரமைக்கப்படவுள்ளன என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரி கொள்ளைக்கு அமைவாக செயல்படாத பட்சத்தில் பிரிட்டன் சுங்கத்தினால் குறித்த பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அனுப்புவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு கூறுதல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறான நிலைமைகளின் போது இலங்கை தபால் திணைக்களம் அதற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காது எனவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.